sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

யாருக்கும் புரியாமல் ஏதேதோ பேசிய கமல்; ராஜ்யசபா எம்பிக்களுக்கு சத்திய சோதனை

/

யாருக்கும் புரியாமல் ஏதேதோ பேசிய கமல்; ராஜ்யசபா எம்பிக்களுக்கு சத்திய சோதனை

யாருக்கும் புரியாமல் ஏதேதோ பேசிய கமல்; ராஜ்யசபா எம்பிக்களுக்கு சத்திய சோதனை

யாருக்கும் புரியாமல் ஏதேதோ பேசிய கமல்; ராஜ்யசபா எம்பிக்களுக்கு சத்திய சோதனை

274


UPDATED : பிப் 05, 2026 10:27 PM

ADDED : பிப் 04, 2026 06:21 PM

Google News

274

UPDATED : பிப் 05, 2026 10:27 PM ADDED : பிப் 04, 2026 06:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ராஜ்ய சபாவில் இன்று பேசிய நடிகர் கமல், யாருக்கும் புரியாத வகையில் ஏதேதோ பேசி எம்பிக்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்கள் நீதி மய்ய தலைவரும், ராஜ்ய சபா எம்.பி.யுமான நடிகர் கமல்ஹாசன் உரையாற்றினார். இது ராஜ்ய சபாவில் அவர் ஆற்றும் முதல் உரையாகும். முதலில் ஆங்கிலத்தில் பேசிய கமல்ஹாசன் பின்னர், தமிழிலும் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது;

தெலுங்கில் இசைபாடி வந்த அந்த மாமனிதர் இசைமேதை தியாகராஜன். அவரின் பிச்சை பாத்திரத்தில் இருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்திற்கு உதவாது என்று தெரிந்தவர்கள் நீங்கள்.

நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றவர்கள், கண்டிப்பாய் கற்பூர புத்தி தான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சை பாத்திரம் உருமாற்றப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியல் ஆனது.

அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர் இன்று தமிழை, தமிழரை பார்த்து என்ன சொல்கிறீர்கள்? தமிழ் பிச்சை எடுக்கக்கூடா உதவாதா? ஓரளவு உண்மைதான். ஒரு தெற்கத்தீ அறிவுரை தங்காய். தமக்கென உங்கள் நீதியை திரட்ட ஆங்கிலத்தில், ஹிந்தியில் பிச்சை எடுக்கலாமே?



தமிழ் பிச்சை எடுக்க உதவாது. திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான். அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். ஓட்டையும், நாட்டையும் இந்த கமல்ஹாசன் விற்கவே மாட்டான்.

உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாக போடுகிறேன். கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளுங்கள்.

பகுத்தறிவு தமிழ் சித்தன் கூற்று இது, உம் வினை உம்மை சுடுக என்றும் எங்கள் நாடு நீடுழி வாழும். உம் வினை உம்மை சுடுக, ஓட்டப்பமும் வீட்டை சுடுக, வந்தீர், வென்றீர், செல்வீர் இது உலக நியதி, அரசியல் நியதியும் கூட. தமிழ் என்றும் வாழும் நலமுடன். சென்றும் வருவேன், நாளை நமதே.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

கமல் தமது உரையில் தொடக்கத்தில் ஆங்கிலத்தில் பேசினார். அதன் பின்னர் அவர் தமது உரையை தமிழில் தொடர்ந்தார். அவரின் இந்த தமிழ் உரையை கேட்டு அவையில் இருந்த நன்கு தமிழ் தெரிந்த எம்பிக்களே எதுவும் புரியாமல் திகைத்தனர்.. இதன் விளக்கத்தை சரியாக சொல்பவர்களுக்கு சிறப்பு பரிசுகள் கூட தரலாம்.


கமல் பேச்சு, தமிழக எம்பிக்கள் பலருக்கும், சத்திய சோதனை என்ற கவுண்டமணியின் பிரபல வசனத்தை நினைவுபடுத்துவதாக இருந்தது.






      Dinamalar
      Follow us