
பார்லிமென்டில் பா.ஜ.,வுக்கு இனி ஆதரவு அளிக்க முடியாது. ஒடிசா நலன் சார்ந்த பிரச்னைகளை, பார்லி.,யில் பிஜு ஜனதா தள எம்.பி.,க்கள் எழுப்புவர். ஒரு வலுவான மற்றும் துடிப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்.
நவீன் பட்நாயக், ஒடிசா முன்னாள் முதல்வர், பிஜு ஜனதா தளம்
அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!
மத்திய பா.ஜ., அரசின் கீழ், 10 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவி வந்தது. இதை ஏற்காத மக்கள், லோக்சபா தேர்தலில் அக்கட்சிக்கு பதிலடி கொடுத்தனர். இதனாலேயே, பா.ஜ.,வால் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை.
மஹுவா மொய்த்ரா, லோக்சபா எம்.பி., - திரிணமுல் காங்.,
வெறும் வித்தை!
அரசியலமைப்பு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்துவதெல்லாம், வெறும் வித்தைகள். இதை எல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள். எமர்ஜென்சி காலத்தில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
குமாரசாமி,மத்திய அமைச்சர், மதச்சார்பற்ற ஜனதா தளம்