பதவியேற்பு உறுதி மொழியில் இனி கோஷங்கள் கூடாது: ஓம்பிர்லா அதிரடி
பதவியேற்பு உறுதி மொழியில் இனி கோஷங்கள் கூடாது: ஓம்பிர்லா அதிரடி
ADDED : ஜூலை 04, 2024 01:02 AM

புதுடில்லி: பார்லிமென்டில் எம்.பி.க்கள் பதவியேற்பு உறுதி மொழியில் இனி யாரும் கோஷங்கள் எழுப்ப கூடாது என லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்/
கடந்த ஜூன் 25-ம் தேதி நடைபெற்ற புதிய லோக்சபா எம்.பி.க்கள் பதவியேற்பு உறுதி மொழியின் போது தமிழக எம்.பி.க்கள் தாய், தந்தையில் துவங்கி, ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, என எவரையும் விட்டு வைக்காமல் விதவிதமான வாழ்க கோஷங்களை எழுப்பி உறுதி மொழி எடுத்தனர்.
தெலுங்கானாவின் ஹைதராபாத் தொகுதி ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி எம்.பி. அசாதுதீன் ஓவைசி, உருது மொழியில் பதவியேற்று கடைசியில் 'ஜெய் பாலஸ்தீனம்' என கோஷமிட்டார். மேலும் எம்.பி.க்கள் ‛‛பாரத் மதா கி. ஜே'' எனவும், கோஷமிட்டபடி உறுதி மொழி ஏற்றனர்.
இந்நிலையில் சபாநாயகர் ஓம்பிர்லா இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். உறுதி மொழி ஏற்பு விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் இனி எம்.பி.க்கள் பதவியேற்பு உறுதி மொழியின் போது எந்த கோஷங்களையும் எழுப்பக்கூடாது. நடைமுறையில் இல்லாத ஒன்றை பின்பற்றக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.