ஜனநாயகத்தில் யாரும் யாரையும் விரட்ட முடியாது: ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
ஜனநாயகத்தில் யாரும் யாரையும் விரட்ட முடியாது: ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
UPDATED : ஏப் 06, 2024 06:14 PM
ADDED : ஏப் 06, 2024 06:01 PM

பெங்களூரு: ‛‛ ஜனநாயகத்தில் யாரும், யாரையும் விரட்ட முடியாது'' என தினமலர் நிருபரிடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
விழுப்புரத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், பா.ஜ.,வை விரட்டி அடிக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், பெங்களூருவில், ஸ்டாலின் பேச்சு குறித்து மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ‛தினமலர் ' நிருபர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு நிர்மலா அளித்த பதில்: விரட்டி அடிப்பவர்களை பற்றி அவர்களுக்கு தெரியும். யார், யாரை விரட்டி அடிப்பார்கள் என்று. ஜனநாயகத்தில் யாரும் யாரையும் விரட்டி அடிக்க முடியாது. மக்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவர்கள் வருவார்கள். ஒருவராக இருந்தாலும், நூறு பேராக இருந்தாலும்.
விரட்டி அடிப்போம் என சொல்பவர்கள் தான், இன்றைக்கு பாசிச கட்சிகள். தி.மு.க.,வின் அரசியல் சொற்பொழிவுகளில், அவர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகளை யோசித்தால், இதேபோன்று அதிகமாக, கோரமாக, பயங்கரமான வார்த்தைகளை போட்டு மக்களை ஆக்ரோஷம் செய்ய முயற்சி செய்வார்கள்.
ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லாத ஒரு கட்சி. அதனால், தான் விரட்டி அடிப்போம் என்ற வார்த்தையை சொல்கிறார்கள். அவர்கள் மட்டும் ஓட்டுப்போடவில்லை. மக்கள் அனைவரும் ஓட்டு போடுகிறார்கள். முதல்வர் இன்னும் கொஞ்சம் வார்த்தையை அளந்து பேசினால் நல்லது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

