ADDED : ஜூலை 12, 2025 01:43 AM

மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் முறைகேடு
செய்து வெற்றி பெற்றதை போலவே, பீஹாரிலும் வெற்றி பெற பா.ஜ.,
முயற்சிக்கிறது. தலைமை தேர்தல் கமிஷன் சுதந்திரமாக செயல்படாமல், பா.ஜ.,வின்
விருப்பப்படி செயல்படுகிறது. என்ன செய்தாலும், பீஹாரில் காங்., கூட்டணி
வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது.
ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.
முடிவு தரூர் கையில்!
காங்., ஒரு ஜனநாயக அமைப்பு. கருத்துக் கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. சசி தரூருக்கு கட்சியில் ஏதாவது பிரச்னை இருந்தால் தாராளமாக தெரிவிக்கலாம். கட்சியே பிடிக்கவில்லை என்றால், என்ன செய்வது? காங்கிரசில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என கருதினால், சசி தரூர் தெளிவான அரசியல் பாதையை தேர்ந்தெடுக்கலாம்.
கே.முரளீதரன், மூத்த தலைவர், காங்.,
அனைவரும் இந்தியர்களே!
ஹிந்தியில் ஒருவர் பேசுவதால், அவர் தாய்மொழியை அவமதிக்கிறார் என, கருதக் கூடாது. அரசியல் ஆதாயத்துக்காகவே ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நாட்டில் நடக்கின்றன. நம் தாய்மொழியுடன் சேர்ந்து ஹிந்தியை கற்றுக் கொள்ள வேண்டும். வெவ்வேறு தாய்மொழிகள் இருந்தாலும், நாம் அனைவரும் இந்தியர்களே.
கிஷன் ரெட்டி, மத்திய அமைச்சர், பா.ஜ.,
,