sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏ.ஐ.,யை பார்த்து யாரும் அஞ்ச வேண்டாம்; எல்லாவற்றிலும் மனித மூளை தான் சிறந்தது!

/

ஏ.ஐ.,யை பார்த்து யாரும் அஞ்ச வேண்டாம்; எல்லாவற்றிலும் மனித மூளை தான் சிறந்தது!

ஏ.ஐ.,யை பார்த்து யாரும் அஞ்ச வேண்டாம்; எல்லாவற்றிலும் மனித மூளை தான் சிறந்தது!

ஏ.ஐ.,யை பார்த்து யாரும் அஞ்ச வேண்டாம்; எல்லாவற்றிலும் மனித மூளை தான் சிறந்தது!

9


ADDED : பிப் 19, 2026 10:47 PM

Google News

9

ADDED : பிப் 19, 2026 10:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''எல்லாவற்றிலும் சிறந்தது மனித மூளை தான். செயற்கை நுண்ணறிவு, மனித குலத்திற்கு ஒரு வெகுமதி. அதை சரி வர, தேவையான அளவுக்கு மட்டும் மனிதர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என, இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான, என்.ஆர்.நாராயணமூர்த்தி கூறினார்.

டில்லி பல்கலைக்கழகத்தில், 'லீடர்ஸ் டாக்' என்ற நிகழ்ச்சியில், பல துறை வல்லுனர்கள் பேசி வருகின்றனர். நிகழ்ச்சியில், என்.ஆர்.நாராயணமூர்த்தி பங்கேற்றார். அதற்கான நிகழ்ச்சிக்கு, குஜராத் மாநில முதல்வரின் முதன்மை ஆலோசகர் ஹஸ்முக் அதியா தலைமை வகித்தார்.அந்த கூட்டத்தில், என்.ஆர்.நாராயணமூர்த்தி பேசியதாவது: செயற்கை நுண்ணறிவு, மனித குலத்திற்கு ஒரு வெகுமதி போன்றது. அது, மனித குலத்திற்கு மிரட்டல் அன்று. இளைஞர்களை கற்க துாண்டுகிறது.

எதுவாக இருந்தாலும், மனித மூளை தான் சிறந்தது. ஆற்றலில் அதை மிஞ்ச, செயற்கை நுண்ணறிவால் முடியாது. இளைஞர்கள் தான் இந்த நாட்டின் சொத்து. பொதுவாக கிடக்கும் வளங்களை போதுமான அளவிற்கு மட்டும் பயன்படுத்த மாணவர்களுக்கு, பள்ளி ஒன்றில் கற்றுத் தரப்படுகிறது. நுண்ணறிவு அந்த வகையில், தொழில் செய்ய வேண்டியது தான்; லாபம் ஈட்ட வேண்டியது தான். எனினும், வருமானமும், லாபமும் இரண்டாம் தரமானவை தான். மனித உழைப்பும், மனித மூளையும் தா ன் முக்கியமானவை.

இன்போசிஸ் நிறுவனத்தில் வெளிப்படையான கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. தொழிலாளர்களின் செயல்பாடுகளை மேம்படுத்திக் கொள்ள, ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த பயிற்சியில் பெரும்பாலான தொழிலாளர்கள் தேர்ச்சி அடைந்து விடுகின்றனர்.

எனவே, மனித மூளை தான், அனைத்திலும் சிறந்தது. செயற்கை நுண்ணறிவு, எந்த காலத்திலும், மனித மூளையை முந்தித் செல்லாது என்பதை உறுதியாக நம்புகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us