தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஓட்டுத் திருட்டு குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகளால் நிரூபிக்க முடியவில்லை; தேர்தல் ஆணையம்

ஓட்டுத் திருட்டு குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகளால் நிரூபிக்க முடியவில்லை; தேர்தல் ஆணையம்

ஓட்டுத் திருட்டு குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகளால் நிரூபிக்க முடியவில்லை; தேர்தல் ஆணையம்


ADDED : நவ 29, 2025 01:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 01:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில் ஓட்டுத் திருட்டு நடந்ததாக சுமத்திய குற்றச்சாட்டை, எதிர்க்கட்சிகளால் நிரூபிக்க முடியவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

243 தொகுதிகளைக் கொண்ட பீஹார் சட்டசபை தேர்தலில் 202 தொகுதிகளில் பாஜ, ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றது. ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் அடங்கிய இண்டி கூட்டணிக்கு வெறும் 35 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இந்தத் தேர்தலின் போது ஓட்டுத் திருட்டு நிகழ்ந்ததாக தேர்தல் ஆணையத்தின் மீது காங்., எம்பி ராகுல் பகிரங்கக் குற்றச்சாட்டு சுமத்தினார். இது தங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும் என்று காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த நிலையில், பீஹார் தேர்தலில் ஓட்டுத் திருட்டு மற்றும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை, எதிர்க்கட்சிகளால் நிருபிக்க முடியவில்லை என்று தேர்தல் ஆணையத்தின் உதவி இயக்குநர் அபூர்வ குமார் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக ஒரு புகார் கூட வரவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது; உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தேர்தல் முடிந்த 7 நாட்களுக்குள் மின்னணு ஓட்டு இயந்திரத்தை சோதனை நடத்த கோரலாம். தேர்தலில் 2ம் அல்லது 3ம் இடம் பிடித்த வேட்பாளர்கள் இந்த சோதனையை கோர முடியும். பீஹார் சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த எந்த வேட்பாளரும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சோதனை செய்ய கோரிக்கை வைக்கவில்லை.

அதேபோல, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் குறித்தும் எந்த விண்ணப்பமும் கிடைக்கப்பெறவில்லை. அதேபோல, 2616 வேட்பாளர்களில் ஒருவர் கூட மறுதேர்தல் நடத்தக் கோரிக்கை விடுக்கவில்லை. ஒரு தொகுதிக்கு 5 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1,215 வாக்குச்சாவடிகளில் விவிபேட் சீட்டுகளில் கட்டாய சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது. மின்னணு வாக்குச்சாவடியில் எந்த முரண்பாடும் கண்டறியப்படவில்லை.

தேர்தல் முடிந்த 5 தினங்களுக்குள் தேர்தல் முடிவுகள் தொடர்பான விபரங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டு விட்டன. இதன்மூலம், வெளிப்படைத்தன்மை மற்றும் தேர்தல் தொடர்பான விபரங்களை அனைத்து தரப்பினருக்கும் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us