sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது: தவெக மாநாட்டுக்கு புதுச்சேரி போலீசார் கட்டுப்பாடு

/

தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது: தவெக மாநாட்டுக்கு புதுச்சேரி போலீசார் கட்டுப்பாடு

தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது: தவெக மாநாட்டுக்கு புதுச்சேரி போலீசார் கட்டுப்பாடு

தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது: தவெக மாநாட்டுக்கு புதுச்சேரி போலீசார் கட்டுப்பாடு

8


UPDATED : டிச 07, 2025 11:16 PM

ADDED : டிச 07, 2025 10:51 PM

Google News

8

UPDATED : டிச 07, 2025 11:16 PM ADDED : டிச 07, 2025 10:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் நடக்கும் விஜய் தலைமையில் நடக்கும் தவெக மாநாட்டுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது. புதுச்சேரியில் வசிக்கும் 5 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே அனுமதி என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை அம்மாநில போலீசார் விதித்துள்ளனர்.

புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 'ரோடு ஷோ' நடத்த அனுமதி அளிக்கக்கோரி, அக்கட்சியினர் டி.ஜி.பி., அலுவலகம் மற்றும் முதல்வர் ரங்கசாமியிடம் மனு அளித்தனர். ஆனால், நீண்ட ஆலோசனைக்கு பின், கரூர் உயிரிழப்பு சம்பவம் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கை சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், 'திறந்த வெளியில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கலாம்' என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, வரும் 9ம் தேதி, விஜய் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தை நடத்த அனுமதி அளிக்குமாறு, சீனியர் எஸ்.பி., கலைவாணனிடம் த.வெ.க.,வினர் மனு அளித்தனர்.

இந்நிலையில், இம்மாநாட்டிற்கு என தவெகவுக்கு புதுச்சேரி போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

* மாநாட்டில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும். தவெக கட்சி வழங்கும் கியூஆர் கோட் உடன் கூடிய நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்

* இந்த அட்டை இல்லாதவர்கள், மாநாட்டு நடக்கும் இடத்துக்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

* இந்த அட்டை இல்லாதவர்கள் மாநாட்டுக்கு வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* மாநாட்டில் பங்கேற்க குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு அனுமதி இல்லை.

* தவெக மாநாட்டில் பங்கேற்பதற்கு புதுச்சேரியில் வசிப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அண்டை மாநிலமான தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது. இடையூறுகளை தவிர்க்க அவர்கள் மாநாட்டுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

*வாகனங்களை நிறுத்துவதற்கு என புதுச்சேரியில் பாண்டி மெரினா பார்க்கிங், மைதான பின்புறம் மற்றும் பழைய துறைமுக பகுதி ஆகியவற்றில் வாகனங்களை ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சாலையோரங்கள் அல்லது மாநாட்டின் உள்ளே வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது.

* மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் முதலுதவி சிகிச்சை, தீயணைப்பு வாகனங்கள்,அவசர காலங்களில் வெளியேறும் வழி ஆகியவை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் புதுச்சேரி போலீசார் கூறியுள்ளார்.

விஜய் கூட்டத்துக்கான இடத்தை தர போலீஸ் மறுப்பு?தமிழக வெற்றி கழகம் சார்பில் வரும், 16ம் தேதி ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்படுள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களில் ஒன்றான பவளத்தாம்பாளையம் தனியார் பள்ளி மைதானத்தில் (ஸ்ரீவாரி மண்டபம் அருகில்) அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் அமைப்பு செயலர் செங்கோட்டையன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:விஜய் பொதுக்கூட்டம் நடத்த, விஜயமங்கலம் டோல்கேட் அருகில் உள்ள, 16 ஏக்கர் நிலத்தை கேட்டுள்ளோம். இதில்லாமல் வாகனங்கள் நிறுத்த, பத்து ஏக்கர் நிலம் கேட்டுள்ளோம். இதேபோல் பவளத்தாம்பாளையத்தில் ஏழு ஏக்கர் இடத்தையும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தோம். இதில்லாமல் ஒரு மாற்றிடமும் தேர்வு செய்து கடிதம் வழங்கவுள்ளோம். பவளத்தாம்பாளையம் இடத்தை ஒதுக்க போலீசார் அனுமதி மறுக்கப்பட்டதாக செய்தி வந்தது. இதுகுறித்து போலீசிடம் கேட்டபோது, அப்படி எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை எனக் கூறிவிட்டனர். பொதுக்கூட்டத்துக்கு, 12:௦௦ மணி முதல் மாலை, 6:௦௦ மணி வரை அனுமதி கேட்டுள்ளோம். கூட்டத்தின் கட்டுப்பாடு குறித்து போலீஸ் தரப்பில் எங்களிடம் எதுவும் கூறவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us