
நம் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு சென்று வந்ததை கவுரவிக்கும் வகையில், பார்லி.,யில் நடந்த விவாதத்தை நடத்த விடாமல், காங்., அமளியில் ஈடுபட்டது வருத்தம் அளிக்கிறது. நாட்டின் முக்கிய விவகாரங்களில், அரசியலை புகுத்தக் கூடாது; கட்சி பேதமின்றி இணைந்து செயல்பட வேண்டும்.
சிவ்ராஜ் சிங் சவுகான் மத்திய அமைச்சர், பா.ஜ.,
ராகுலை பிரதமராக்குவோம்!
பீஹார் சட்டசபை தேர்தலில் ஓட்டுகளை திருடி, குறுக்கு வழியில் வெற்றி பெற பா.ஜ., கூட்டணி முயற்சிக்கிறது. அக்கூட்டணி என்ன செய்தாலும், எங்களது வெற்றியை தடுக்க முடியாது. இந்த வெற்றிக்கு பின், 2029 லோக்சபா தேர்தலில், காங்., தலைவர் ராகுலை பிரதமராக்க அயராது உழைப்போம். நிச்சயம், அதிலும் வெல்வோம்.
தேஜஸ்வி யாதவ் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
பாதிப்பு குறைவு!
வரி விதிப்புகளால் குறைவாக பாதிக்கப்படும் நாடாக, நம் நாடு உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்ளூர் நுகர்வு அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம். நம் பொருளாதாரத்தில் என்ன தாக்கம் ஏற்பட்டாலும் வீழ்ச்சி அடையாது. மாறாக, அது வேகமாக வளர்ந்து கொண்டே இருக்கும்.
சையத் ஜாபர் இஸ்லாம் செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,