பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை : நாளை விவசாயிகள் பேரணி
பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை : நாளை விவசாயிகள் பேரணி
ADDED : பிப் 20, 2024 02:16 AM

சண்டிகர்
: மத்திய அரசு -விவசாயிகளுடனான பேச்சில் முன்னேற்றம் ஏற்படவில்லை என தகவல்
வெளியாகியுள்ளதால், அடுத்த கட்டமாக நாளை (21-ம்
தேதி) டில்லி நோக்கி பேரணி துவக்க உள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாய
விளை பொருட்களுக்கு சட்ட ரீதியான குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி,
விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச விவசாயிகள் டில்லியை
முற்றுகையிடும் போராட்டத்தை சமீபத்தில் துவக்கினர்.
அவர்கள்,
பஞ்சாப் - ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அரசு தரப்புக்கும்,
விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்த பலசுற்று பேச்சில்
முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில், மத்திய உணவு மற்றும் பொது
வினியோகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல், வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன்
முண்டா, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் உள்ளிட்டோர் பல
சுற்றுக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நேற்று நடத்திய
பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து நாளை (பிப்.21)ம் தேதி டில்லி நோக்கி பேரணி துவக்க உள்ளதாக விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

