பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு தற்போதைக்கு இல்லை: மத்திய அமைச்சர் பேட்டி
பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு தற்போதைக்கு இல்லை: மத்திய அமைச்சர் பேட்டி
ADDED : ஜன 03, 2024 02:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு தற்போதைக்கு இல்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 மே 22ம் தேதிக்கு பிறகு சென்னையில், பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 592வது நாளாக ஒரே விலையில் நீடிக்கிறது. இச்சூழலில், லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
இது குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தெற்காசிய நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு தற்போதைக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.