ADDED : பிப் 08, 2024 12:42 AM

எந்த கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், ஒன்று மட்டும் நிச்சயம். சிறப்பாக வேலை செய்வோருக்கு, உரிய மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்காது. அதே போல், வேலை செய்யாமலிருப்போர் தண்டிக்கப்படுவதுமில்லை. இதை நான் நகைச்சுவையாக குறிப்பிடுகிறேன்.
நிதின் கட்கரி, மத்திய அமைச்சர், பா.ஜ.,
கொள்ளை அடிப்பதில் குறி!
கடந்த இரு ஆண்டுகளாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. அப்படியிருந்தும் அதற்கான பலன் நுகர்வோருக்கு தரப்படுவதில்லை. பொது மக்களிடம் இருந்து கொள்ளை அடிப்பதிலேயே மத்திய அரசு குறியாக உள்ளது.
ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்.,
குழப்பத்தை ஏற்படுத்தாதீங்க!
ராஷ்ட்ரீய லோக் தள தலைவர் ஜெயந்த் யாதவ், 'இண்டியா' கூட்டணியில் இருந்து வெளியேறவில்லை; கூட்டணியில் தான் இருக்கிறார். குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில், பா.ஜ., ஈடுபட்டுள்ளது. அது ஒருபோதும் பலிக்காது.
சிவ்பால் சிங் யாதவ், மூத்த தலைவர், சமாஜ்வாதி
