பிடிவாதத்தின் மறுபெயர் மம்தா; பதில் சொல்லியே தீரணும் என பிரதமர் மோடிக்கு கடிதம்!
பிடிவாதத்தின் மறுபெயர் மம்தா; பதில் சொல்லியே தீரணும் என பிரதமர் மோடிக்கு கடிதம்!
ADDED : ஆக 30, 2024 02:07 PM

புதுடில்லி: 'பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கொடுக்க சட்டம் இயற்ற வேண்டும். இது போன்ற உணர்ச்சிகரமான பிரச்னைக்கு உங்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை' என மீண்டும் பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
கோல்கட்டாவில் மருத்துவ கல்லூரியில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில், பிரதமருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கொடுக்க சட்டம் இயற்ற வேண்டும். இது போன்ற உணர்ச்சிகரமான பிரச்னைக்கு உங்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இருப்பினும் இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தில் இருந்து பதில் வந்துள்ளது.
மனசாட்சி
சமீபத்தில் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ள தீவிரமான பிரச்னைகளை சரி செய்ய எந்த பதிலும் குறிப்பிடவில்லை. இந்தப் போக்கைப் பார்ப்பது பயமாக இருக்கிறது. இது சமூகம் மற்றும் தேசத்தின் நம்பிக்கையையும் மனசாட்சியையும் உலுக்குகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது நமது கடமையாகும். கொடூரமான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான மத்திய சட்டத்தின் மூலம் இத்தகைய தீவிரமான பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.
முதல் கடிதம்!
கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி புள்ளிவிவர அடிப்படையில் நாடு முழுதும் தினமும் 90 பலாத்கார வழக்குகள் பதியப்படுவது வேதனை அளிக்கிறது என பிரதமருக்கு மம்தா கடிதம் எழுதினார். இதற்கு மேற்குவங்கத்தில் 123 விரைவு கோர்ட்டுகள் அமைத்தும் செயல்படாமல் உள்ளதாக, மம்தாவுக்கு மத்திய அரசு பதில் கடிதம் அனுப்பி இருந்தது.