விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை: அகிலேஷ் யாதவ்
விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை: அகிலேஷ் யாதவ்
UPDATED : ஜன 07, 2024 05:01 PM
ADDED : ஜன 07, 2024 04:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லக்னோ: வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு பா.ஜ., தீர்வு காணவில்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அகிலேஷ் யாதவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விவசாயிகளின் பங்களிப்பு இல்லாமல் வளர்ந்த இந்தியா சாத்தியமா? வளர்ந்த இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்கள் இருக்க முடியுமா?.
வேலை வாய்ப்பை உறுதி செய்ய பா.ஜ., என்ன நடவடிக்கை எடுத்தது? விவசாயிகளின் பிரச்னைகளுக்கு பா.ஜ., என்ன தீர்வு கண்டது?. இந்தக் கேள்விகளுக்கு பா.ஜ., விடம் பதில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.