
வழக்கமான உரையாகவே ஜனாதிபதி உரை இரு ந்தது. அதில், எந்த உண்மை தகவலும் இல்லை. வளர்ந்த இந்தியா பற்றி உரையில் அதிகம் இருந்தது. ஆனால், அதற்கு தெளிவான இலக்குகளோ , காலக்கெடுவோ இல்லை. புதிய வேலை உறுதி சட்டத்தின் மூலம், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இந்த அரசு பறித்துள்ளது.
மல்லிகார்ஜுன கார்கே காங்., தேசிய தலைவர்
முடிவுரை எழுத தயார்!
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையிலான திரிணமுல் காங்., அரசு ஓட்டு வங்கிக்காக சட்ட விரோத ஊடுருவல்காரர்களை பாதுகாக்கிறது. இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஹிந்துக்கள் துன்புறுத்தப்படுகின்றனர். இந்த கொடூர ஆட்சிக்கு வரும் தேர்தலில் முடிவுரை எழுத மக்கள் தயாராகி விட்டனர்.
நிதின் நபின் பா.ஜ., தேசிய தலைவர்
விளக்கம் அளிக்க வேண்டும்!
பல்கலை மானியக் குழுவின் புதிய விதிமுறைகள் தொடர்பாக குழப்பம் நீடிக்கும் நிலையில், அது குறித்து, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டு ம். இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதியை உறுதிப்படுத்த ஜாதி வாரியான கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்.
மனோஜ் குமார் லோக்சபா எம்.பி., - காங்.,

