தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ அக்கறை இல்லை!

அக்கறை இல்லை!

அக்கறை இல்லை!


ADDED : ஜூன் 08, 2025 11:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2025 11:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சியில் உலக தரம் வாய்ந்த அரசுப் பள்ளிகள் கட்டப்பட்டன. இதில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் குழந்தைகள் கல்விக்காக கட்டப்பட்ட மூன்று பள்ளிகளை திறக்காமல், தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக பா.ஜ., அரசு பூட்டி வைத்துஉள்ளது. இது, டில்லி மக்கள் மீதான அக்கறைஇன்மையை காட்டுகிறது.

ஆதிஷி, டில்லி முன்னாள் முதல்வர், ஆம் ஆத்மி

உத்தரவை மீற முடியாது!


நீதிமன்ற உத்தரவுபடியே, டில்லி மதராஸி கேம்ப் குடியிருப்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நீதிமன்ற உத்தரவை மீறி, அரசு நிர்வாகம் எதுவும் செய்ய முடியாது. வெள்ள தடுப்பு நடவடிக்கை காரணமாக, அக்குடியிருப்புகள் அகற்றப்பட்டன. அங்கு வசித்த மக்களுக்கு மாற்று குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ரேகா குப்தா,டில்லி முதல்வர், பா.ஜ.,

துணை நிற்கும் ஐரோப்பா!


பஹல்காம் தாக்குதலில், பாகிஸ்தான் அரசுக்கு உள்ள பயங்கரவாத தொடர்புகள் பற்றியும், நம் நாட்டின் நிலைப்பாடு பற்றியும் ஐரோப்பிய நாடுகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தோம். இதை கேட்டறிந்த அந்நாடுகள், தங்கள் கண்டனத்தை பதிவு செய்ததுடன், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் துணை நிற்பதாக உறுதி அளித்துள்ளன.

புரந்தேஸ்வரி, லோக்சபா எம்.பி., பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us