sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீடாதிபதிகளின் உன்னத சேவைகள்

/

பீடாதிபதிகளின் உன்னத சேவைகள்

பீடாதிபதிகளின் உன்னத சேவைகள்

பீடாதிபதிகளின் உன்னத சேவைகள்

5


ADDED : அக் 27, 2024 06:02 AM

Google News

ADDED : அக் 27, 2024 06:02 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நான்முக பிரம்மாவின் அவதாரமாகவே போற்றப்பட்டவர் ஸ்ரீ சுரேஸ்வராசார்யார். ஸ்ரீ சங்கரரிடம் துறவு ஏற்கும் முன்னர் பூர்வமீமாம்சை எனும் சாஸ்திரத்தில் தன்னிகரற்று

திகழ்ந்தவர். துறவேற்ற பின், வேதாந்த சாஸ்திரத்தில் கரை

கண்டவர் ஆனார். ஸ்ரீ சங்கரரின் உபதேசங்களுடைய சாரமாக நைஷ்கர்ம்ய ஸித்தி எனும் மாபெரும் நுாலை இயற்றியவர்

பீடத்தின் நான்காவது ஜகத்குருவான ஸ்ரீ ஞானகனர் தத்வசுத்தி எனும் சிறந்த நுாலை இயற்றியவர். சிருங்கேரியில்உள்ள ஜனார்தனஸ்வாமி

ஆலயத்தை உருவாக்கியவர்

பீடத்தின், 12ம் குருவான ஸ்ரீ வித்யாரண்யர் மிக பிரசித்தி பெற்றவர். ஹரிஹரர் - புக்கர் களுக்கு ஆசியளித்து விஜயநகர சாம்ராஜ்யம் உருவாக காரணமானவர்.

இவரது காலத்தில் தான் சிருங்கேரி பீடமானது வெகுவாக அரசு மரியாதைகளை பெற்று, ஒரு சமஸ்தானமாகவே உருவாகியது ஹரிஹரர் - புக்கருக்கு பின் வந்த அரசர்கள் அனைவருமே சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குருக்களை தங்களது

ராஜகுருவாக ஏற்று, மிகுந்த மரியாதைகளை செய்து வந்தனர்

 19ம் குருவான ஸ்ரீ இரண்டாம் புருேஷாத்தம பாரதீ ஸ்வாமிகள் கிருஷ்ணதேவராயரின் குரு ஆவார். இவரது ஆசிகளால், கிருஷ்ணதேவராயர் பெரும் வெற்றிகளை அடைந்து,

நல்லாட்சி புரிந்து வந்தார்

20ம் குருவான ஸ்ரீ ராமசந்திர பாரதீ பெரும் தபஸ்வி ஆவார். ஒருமுறை ஜைனர்களின் அழைப்பை ஏற்று, அவர்களது கோவிலுக்கு இவர் சென்றபோது, அங்கிருந்த விக்ரஹம் அனந்தபத்மனாப ஸ்வாமியின் விக்ரஹமாக மாறி, அனைத்து பக்தர்களையும் வியப்படைய வைத்ததாம்

24வது குருவான ஸ்ரீ அபினவ நரசிம்ஹ பாரதீ ஸ்வாமிகள் மந்திர சாஸ்திரத்தில் பெரும் விற்பன்னர். சிவகீதை எனும் நுாலுக்கு உரை எழுதியவர். ஒருமுறை சிருங்கேரியில் உள்ள மலஹானிகரேசுவரர் ஆலயத்திற்கு

இவர் சென்ற சமயம், அங்கேகணபதி விக்ரஹம்

எதுவும் இல்லாததைக் கண்டு ஒரு மஞ்சள் கிழங்கை எடுத்து அங்கிருந்த துாண் ஒன்றில் கணபதி உருவத்தை வரைந்து வழிபட்டார்.

வெறும் வரைவாக இருந்த அந்த உருவம் நாளடைவில், புடைத்தெழுந்து கணபதிவிக்ரஹமாகவே மாறிய அதிசயம் நடந்தது. இப்போது ஸ்தம்ப கணபதி என்ற பெயரில், அந்த வினாயகர் பக்தர்களால் மிக உற்சாகமாக வழிபடப்படுகிறார்

25வது குருவான ஸ்ரீ முதலாம் சச்சிதானந்த பாரதீ ஸ்வாமிகள் கர்நாடக பிரதேசங்களை ஆண்டு கொண்டிருந்த நாயக்கர்களால் பெரிதும் போற்றப்பட்டவர்.

பைரவன் எனும் கொடுங்கோல் மன்னன் ஒருவன், சிருங்கேரியின் செல்வங்களை கொள்ளையடித்து செல்ல முற்பட்டபோது, ஜகத்குருவானவர் சிருங்கேரியின் காவல் தெய்வங்களை தியானம் செய்யவே, நான்கு காவல் தெய்வங்களின் ஆலயங்களில் இருந்தும், தெய்வீக ஒளியுடன் கூடிய ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் கிளம்பி அம்மன்னனையும் அவனது படைகளையும் துரத்தி அடித்தனராம்

30வது ஜகத்குருவான ஸ்ரீ மூன்றாம் சச்சிதானந்த பாரதீ ஸ்வாமிகள் ைஹதர் அலி, திப்பு சுல்தான், நிஜாம் உல் முல்க் போன்ற இஸ்லாமிய மன்னர்களையும் தம் கருணையால் கவர்ந்தவர். இவர்கள் அனைவருமே அடிக்கடி ஸ்வாமிகளுடன் கடிதம்

வாயிலாக தொடர்பு கொண்டு, அவரது ஆலோசனைகளை கேட்டு ஆட்சி செய்து வந்தனர்

மைசூர் ராஜ்ஜியத்தை சேர்ந்த திவான் பூர்ணய்யா என்பவர் ஸ்வாமிகளை வாதத்திற்கு அழைக்க, ஸ்வாமிகளும் சம்மதித்தார். ஸ்வாமிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இருவருக்கும் இடையில் ஒரு திரை தொங்க விடப்பட்டிருந்தது.

வாதம் துவங்கி ஒரு கட்டத்தை அடைந்த போது திரையின் மறுபுறம் ஒரு பெண்ணின் குரல் கேட்பதை அறிந்த திவான், ஆச்சரியப்பட்டு திரையை சற்று விலக்கிப் பார்த்த போது

ஸ்ரீ சாரதாம்பாளே அங்கு அமர்ந்திருப்பதை கண்டு

விக்கித்து போனார்

33ம் ஜகத்குருவான ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ஹ பாரதீ மஹாஸ்வாமிகள் காலடியில் ஸ்ரீ சங்கரர் அவதரித்த இடத்தை கண்டறிந்து, அங்கு ஸ்ரீ சங்கரருக்கும், ஸ்ரீ சாரதாம்பாளுக்கும் 1910ல் ஆலயங்களை எழுப்பினார்

ஒவ்வொரு ஆண்டும் சங்கர ஜெயந்தியை கொண்டாடும் வழக்கத்தையும் தோற்றுவித்தார்

க்ஷஸ்ரீ சங்கரரின் அனைத்து படைப்புகளையும் முதன் முதலாக புத்தக வடிவில் அச்சிட்டு வெளிக்கொணர செய்த ஆச்சாரியரும் இவரே!

35வது பீடாதிபதியாக விளங்கிய ஜகத்குரு அபினவ வித்யா தீர்த்த மஹாஸ்வாமிகளின் காலத்தை, சாரதா பீடத்தின் பொற்காலம் என்றால் மிகையாகாது

ஆதி சங்கரருக்குப்பின் நேபாளத்திற்கு சென்ற முதல் பீடாதிபதி இவர் தான். இவரது காலத்தில்தான் இந்தியா முழுதும் பல இடங்களில் சிருங்கேரி மடத்தின் கிளைகள் உருவாக்கபட்டன.






      Dinamalar
      Follow us