தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/நொய்டா போலீசார் விதித்த அபராதம்: கிளம்பியது விவாதம்

நொய்டா போலீசார் விதித்த அபராதம்: கிளம்பியது விவாதம்

நொய்டா போலீசார் விதித்த அபராதம்: கிளம்பியது விவாதம்

1


ADDED : நவ 13, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : நவ 13, 2026 06:41 PM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் இலகுரக வாகனங்கள்(கார்கள்) மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்திலும் கனரக வாகனங்கள் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வழக்கமாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

குளிர்காலங்களில் மட்டும் இது மாறுபடும். இதனை கண்காணிக்க ஆங்காங்கே தானியங்கி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இந்த வரம்பை மீறும் இலகுரக வாகனங்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், கனரக வாகனங்களுக்கு 4 ஆயிரம் ரூபாயும் அபராதம். ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

இதனிடையே, அனுஜீத் சிவம் என்பவர் இந்த சாலையில் காரில் பயணித்துள்ளார். மணிக்கு 101 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றார்.

இதனை படம்பிடித்த கேமரா அவருக்கு அபராதம் கட்டச் சொல்லி நோட்டீஸ் வந்தது.அதில் கூடுதலாக, 100க்கு பதில் 101 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிப்பதற்காக 2 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் எனக்கூறப்பட்டு இருந்தது. அதில் குறிப்பிடப்பட்ட இடம் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:

யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் 2 ஆயிரம் அபராதம் செலுத்த சலான் வந்தது.

நான் சென்ற வேகம்: மணிக்கு 101 கிமீ

அனுமதிக்கப்பட்ட வரம்பு: மணிக்கு 100 கிமீ

கூடுதலாக, மணிக்கு 1கிமீ வேகத்தில் பயணித்தேன் அவ்வளவு தான்.

போன்ஸ்

நான் சென்ற இடமாக 0°N, 0°E என குறிப்பிடப்பட்டது. அது அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி.

சாலை பாதுகாப்பு உண்மையிலேயே செயல்படுகிறதா '' எனக்கூறி நொய்டா போலீஸ், உபி போக்குவரத்து போலீசாரை டேக் செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்த நொய்டா போலீசார், '' உதவி மையத்தை தொடர்பு கொள்ளும்படி'' கூறியிருந்தது.

இது இணையவாசிகளின் கவனத்தை பெற்றது. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை பதிவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us