நொய்டா ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் - மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது
நொய்டா ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் - மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது
ADDED : ஆக 07, 2025 11:28 PM

தெ ய்வீக சக்தி உள்ள இந்த பிள்ளையாரை காண, நொய்டா மட்டுமின்றி, சுற்றுப்புறத்தில் இருக்கும் பக்தர்கள் தரிசனத்திற்கு, அன்றிலிருந்து இன்று வரை பல்வேறு இடங்களிலிருந்து, நாற்பது வருடங்களுக்கு மேலாக வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கோவிலில் பல்வேறு சமய, ஆன்மிக, கலாசார நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
செக்டார் 22 உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2022 அன்று, பிரம்மஸ்ரீ வருண் ஷர்மா தலைமையில், வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.
இந்த கோவிலின் மூலவர் ஸ்ரீ வரசித்தி விநாயகர் தவிர, ஸ்ரீ நவகிரகங்கள் மற்றும் ஸ்ரீ துர்க்கை ஆகியவை உள்ளன.
சங்கர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் வி.பி.எஸ்.,சின் ஆஸ்தான வாத்தியார்கள். இவர்கள் தலைமையில் தினசரி பூஜைகள் மற்றும் ஹோமங்கள், கோவில் வாத்தியார் ஜெகதீசன் சிவாச்சாரியார் உதவியுடன் நடத்தப்படுகிறது.
இந்த கோவிலில், வி.பி.எஸ்., நிர்வாகம், பல சமய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. குறிப்பாக, தியாகராஜ ஆராதனை, மகா சிவராத்திரி, ஸ்ரீ ராம நவமி, ஆவணி அவிட்டம், ஆடி பூரம்.
புரட்டாசி மாத பஜனைகள், ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி அன்று சிறப்பு அபிஷேகங்கள், மனிதகுலத்தின் நலனுக்காக கோவில் வளாகத்தில் நடைபெறுகின்றன.
வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் இக்கோவிலை நிர்வகிக்கிறது. இது, ஒத்த எண்ணம் கொண்டவர்களால் துவங்கப்பட்டு, நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பக்தர்களுக்கு சேவை செய்கிறது. இந்த கோவில் கோபுரம், பிள்ளையாரை தரிசனம் செய்பவர்களுக்கு கோடி புண்ணியம்.
அனைத்து நன்கொடைகளும் வருமான வரிச் சட்டத்தின் கீழ் விலக்கு பெற தகுதியுடையது.
தொடர்புக்கு: ஜி.ஜானகி, 98114 23705