பத்ம விருதுகளுக்கான பரிந்துரை ஜூலை 31 வரை சமர்ப்பிக்கலாம்
பத்ம விருதுகளுக்கான பரிந்துரை ஜூலை 31 வரை சமர்ப்பிக்கலாம்
ADDED : ஏப் 12, 2025 01:06 AM
புதுடில்லி: அடுத்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை, ஜூலை 31க்குள் சமர்ப்பிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த 1954- முதல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக சேவை, மருத்துவம், அறிவியல், வர்த்தகம், தொழில் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு, 'பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ' ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், 2026 குடியரசு தினத்தை முன்னிட்டு, பத்ம விருதுகளுக்கு தகுதியான நபர்களை, ஜூலை 31க்குள் பரிந்துரைக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி, https://awards.gov.in என்ற இணையதளத்தில், தகுதியான நபர்களை பரிந்துரைக்கலாம். அவர் செய்த சாதனைகள், சேவைகள் குறித்த தகவல்கள், ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
நாட்டு மக்கள் அனைவரும் இந்த பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம். ஒருவர் தன் பெயரை சுயமாகவே முன்மொழியலாம்.
டாக்டர்கள், விஞ்ஞானிகள் தவிர, பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பத்ம விருதுகளுக்கு தகுதியற்றவர்கள் ஆவர்.

