UPDATED : ஏப் 12, 2024 08:37 AM
ADDED : ஏப் 12, 2024 08:21 AM

புதுடில்லி: லோக்சபா தேர்தல் 3ம் கட்ட ஓட்டுப்பதிவுக்கான 12 மாநிலங்களில் இன்று (ஏப்.12) வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. மொத்தம் 7 கட்டங்களாக இந்திய ஜனநாயக திருவிழா தேர்தல் நடக்கிறது.
தமிழகத்தில் முதல்கட்ட தேர்தல் ஏப்.19 க்கான வேட்பு மனு மார்ச் 20 ல் துவங்கி மார்ச் 30 உடன் நிறைவு பெற்றது. 2 ம் கட்ட தேர்தல் ஏப்-26 ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. அசாம், பீகார், கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது.
3 ம் கட்ட தேர்தல் நடக்கும் மாநிலங்கள் விவரம் வருமாறு: அசாம், பீஹார், சட்டீஸ்கர், கோவா, கர்நாடகா, மத்தியபிரதேசம், மஹாராஷ்ட்டிரா, உபி., மேற்குவங்கம், தாத்ரா மற்றும் ஹாவேலி, டாமன் மற்றும் டையூ, ஜம்மு காஷ்மீர் , குஜராத், மஹாரஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களில் 94 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. ஏப்.19 வேட்பு மனு கடைசி நாள். வாபஸ் பெறும் நாள் ஏப்.22. ஓட்டுப்பதிவு மே. 07 ஆகும் .

