sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹிந்து அல்லாதோருக்கு பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களில் தடை

/

ஹிந்து அல்லாதோருக்கு பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களில் தடை

ஹிந்து அல்லாதோருக்கு பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களில் தடை

ஹிந்து அல்லாதோருக்கு பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களில் தடை

8


ADDED : ஜன 27, 2026 01:09 AM

Google News

ADDED : ஜன 27, 2026 01:09 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பிற கோவில்களில் நுழைய, ஹிந்து அல்லாதோருக்கு தடை விதிக்கப்படுவதாக அக்கோவில்களை நிர்வகிக்கும் பத்ரிநாத் - கேதார்நாத் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை, 'சார்தாம்' என்றழைக்கப்படுகின்றன.

இந்நிலையில், பத்ரிநாத் - கேதார்நாத் கோவில் நிர்வாகத் தலைவர் ஹேமந்த் திவேதி நேற்று கூறியுள்ளதாவது: பத்ரிநாத், கேதார்நாத் கோவில்கள் மற்றும் கோவில் நிர்வாகக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற கோவில்களில், ஹிந்து அல்லாதோர் நுழைய தடை விதிக்கப்படுகிறது. இது தொடர்பான தீர்மானம், நிர்வாகக் குழுவின் வாரியக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும். குளிர்காலத்தை முன்னிட்டு, ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்த பத்ரிநாத் கோவில் நடை, ஏப்ரல் 23ல், பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதன்படி, நுாற்றாண்டுகள் பழமையான பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட கோவில்களில், ஹிந்துக்கள் மட்டுமே இனி அனுமதிக்கப்படுவர்.






      Dinamalar
      Follow us