sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'தனிப்பட்ட உரிமை அல்ல!'

/

'தனிப்பட்ட உரிமை அல்ல!'

'தனிப்பட்ட உரிமை அல்ல!'

'தனிப்பட்ட உரிமை அல்ல!'


ADDED : மார் 05, 2024 01:06 AM

Google News

ADDED : மார் 05, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அமர்வு, 135 பக்க தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

 எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் என்பது, ஒட்டுமொத்த சபைக்கானது. தனிப்பட்ட முறையில் ஒருவருக்கானது அல்ல. கூட்டாக இணைந்து செயல்படுவதற்காகவே, இந்த சட்ட பாதுகாப்பு உள்ளிட்ட சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன

 அந்த சிறப்பு உரிமைகள் என்பது, குறிப்பிட்ட சபையின் நடவடிக்கைகள் இணக்கமாகவும், சுமுகமாகவும் நடப்பதற்காகவே அளிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில், சபைக்கு எதிராக செயல்படும்போது, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் இந்த சிறப்புரிமைகள் கோர முடியாது

 உயர்ந்த நோக்கத்துடன் தான், பார்லிமென்ட், சட்டசபைகளுக்கு சில அதிகாரங்கள், சலுகைகள், சிறப்புரிமைகளை, நம் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ளது. இதையே வைத்து, சபைக்கு பொருந்தாத அல்லது எதிரான செயல்களுக்கு சட்ட பாதுகாப்பை உறுப்பினர்கள் கோர முடியாது

 இந்த சிறப்புரிமைகள் இரண்டடுக்கு பரிசோதனைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். முதலில், எந்த ஒரு நடவடிக்கையும், சபையின் ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கானதாக இருக்க வேண்டும். இரண்டாவது, மக்கள் பிரதிநிதியாக ஒருவர் சிறப்பாக செயல்படுவதற்கு தேவையானதாக இருக்க வேண்டும்

 ஒரு சட்டசபையோ அல்லது பார்லிமென்டோ, தனி உறுப்பினர்களால் அமைந்ததல்ல. அது ஒரு கூட்டு அமைப்பாகும்

 ஒரு சிறந்த ஜனநாயகத்தில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக் கூடியதாக, அவை தொடர்பாக விவாதிக்கக் கூடியதாக ஜனநாயக அமைப்புகள் இருக்க வேண்டும். அதில், சட்டசபை மற்றும் பார்லிமென்ட் முதன்மையான இடத்தில் உள்ளன

 ஜனநாயகத்துக்கு உயிர் கொடுக்கும் வகையிலும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும், சபைகளின் அலுவல்கள், விவாதங்கள், வாக்குவாதங்கள் இருக்க வேண்டும்

 இவை குறையும்போது, மக்கள் அந்தப் பொறுப்பை, கடமையை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். சபைகளின் செயல்பாடுகள் குறித்து அவற்றுக்கு வெளியே மக்கள் விமர்சிப்பது அல்லது வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவர்

 சபைகள் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டியது, அதன் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டியது, அதில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் பொறுப்பாகும். இதற்காகவே, சில சிறப்புரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதுவும் ஒட்டுமொத்த சபையின் சிறப்பான செயல்பாட்டுக்காக

 சபையில் பேசுவதற்கு அல்லது ஓட்டளிக்க லஞ்சம் வாங்குவது என்பது, சபையின் ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கு எதிரானது. இதில் ஈடுபடுவோர், சிறப்புரிமையை கோர முடியாது.

இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.






      Dinamalar
      Follow us