
உ.பி.,யில் பல ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்தவர்கள், மக்களுக்கு எதையுமே செய்யவில்லை. அவர்கள் செய்யாததை குறுகிய காலத்திலேயே நாங்கள் செய்து முடித்துள்ளோம்; இன்னமும் செய்வோம். எங்களை கேள்வி கேட்க அவர்களுக்கு தகுதி இல்லை.
- யோகி ஆதித்யநாத்
உ.பி., முதல்வர், பா.ஜ.,
களங்கம் ஏற்பட்டு விடும்!
பார்லி.,யில் எம்.பி.,க்களின் கேள்விகளுக்கு அரசு அளிக்கும் உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படுவது மிகவும் அவசியம். இல்லையெனில், ஜனநாயகத்துக்கு களங்கம் ஏற்பட்டு விடும். இரு சபைகளில் அமைச்சர்கள் அளிக்கும் உத்தரவாதங்களை அரசு தீவிரமாக கையாளுகிறது.
- கிரண் ரிஜிஜு,
மத்திய அமைச்சர், பா.ஜ.,
விலை குறையாதது ஏன்?
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால், நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. பொது மக்களிடம் இருந்து, மத்திய அரசு அச்சமின்றி கொள்ளை அடிக்கிறது. இதற்கு முடிவு கட்டப்படும்.
- மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்.,