கச்சா எண்ணெய் மட்டுமல்ல ரஷ்யாவில் இருந்து பீர் வருகிறது
கச்சா எண்ணெய் மட்டுமல்ல ரஷ்யாவில் இருந்து பீர் வருகிறது
ADDED : அக் 13, 2025 01:35 AM
மாஸ்கோ:ரஷ்யாவின் முன்னணி பீர் தயாரிப்பு நிறுவனமான 'பால்டிகா' அடுத்த ஆண்டில் இந்தியாவில் தன் தயாரிப்புகளை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்து உள்ளது.
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், ரஷ்யா பல்வேறு வகையில் ஆதரவை வழங்கி வருகிறது.
இந்தியாவின் இழப்பை ஈடுகட்ட வர்த்தக நடைமுறைகளை அதிகரிக்க வேண்டும் என்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரஷ்யாவின் பிரபல பீர் பிராண்டான பால்டிகா, அடுத்தாண்டு முதல் இந்திய சந்தையில் நுழைய இருப்பதாக அறிவித்து உள்ளது.
மஹாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் முதற்கட்டமாக பால்டிகா பீர் அறிமுகமாக உள்ளது. பின்னர், தேவையைப் பொறுத்து படிப்படியாக மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என, நிறுவனத்தின் வணிக இயக்குநர் எகோர் குசெல்நிகோவ் தெரிவித்துள்ளார்.