
என் 35 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், என் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன; எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. நிறைய அவதுாறுகளை சந்தித்துள்ளேன். தேர்தலுக்கு முன் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வரும்; அதன்பின், அவை மறைந்துவிடும்.
அஜித் பவார் மஹா., துணை முதல்வர், தேசியவாத காங்கிரஸ்
ஓட்டுக்கு பணம் வாங்குங்கள்!
பீஹாரில், தேர்தலுக்கு முன் தான் தே.ஜ., கூட்டணிக்கு பெண்கள் நினைவு வரும். அவர்களின் ஓட்டுகளை கவர, 10,000 ரூபாய் வழங்கியுள்ளனர். இந்த நிதியை, அவர்கள் லஞ்சமாக வழங்கியுள்ளனர்; அதை பெற்று கொள்ளுங்கள், ஆனால், அவர்களுக்கு ஓட்டு அளிக்காதீர்கள்.
பிரியங்கா லோக்சபா எம்.பி., காங்கிரஸ்
முழு நம்பிக்கை!
பீஹாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கூட, 'மஹாகட்பந்தன்' கூட்டணியினர் மாநில வளர்ச்சிக் காக இதுவரை எதுவும் பேசவில்லை; எனவே, அரசியல் விழிப்பு பெற்ற மக்கள், தே.ஜ., கூட்டணியை பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற செய்வர் என்ற நம்பிக்கை உள்ளது.
சுதான்சு திரிவேதி செய்தித்தொடர்பாளர், பா.ஜ.,

