ADDED : ஜூன் 28, 2026 04:01 AM

நம் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அல்லாமல், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவே பாரதிய ஜன சங்கம் மற்றும் பா. ஜ., ஆகியவை தொடங்கப்பட்டன. ஆனால், 1975ல் காங்., அரசு அமல்படுத்திய அவசரநிலை பிரகடனம், நம் நாட்டின் ஜனநாயக த்தை கழுத் தை நெரித்துக் கொல்ல முயன்றது .
யோகி ஆதித்யநாத் உ.பி., முதல்வர், பா.ஜ.,
எதிர்காலம் பறிப்பு!
மஹாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் கசிவால், தேர்வு ரத்தானது. இது, வினாத்தாள் கசிவு மட்டுமல்ல; இளைஞர்களின் எதிர்காலத்தை பறிக்கும் செயல். நம் நாட்டின் கல்வி முறை, கொள்ளையடிக்கும் அமைப்பாக மாறியுள்ளதால், இளைஞர்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்
சீர்குலைக்க முயற்சி!
தெலுங்கானாவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியை தடுக்கும் பணியில் முதல்வர் ரேவந்த் ரெட்டி ஈடுபட்டுள்ளார். சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்குடன், முஸ்லிம்களை துாண்டிவிடும் வகையில் கருத்துகளை பகிர்கிறார். இது, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி.
கிஷன் ரெட்டி மத்திய அமைச்சர், பா.ஜ.,
