ADDED : டிச 18, 2024 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெலகாவி; “பெலகாவி சுவர்ண விதான் சவுதாவின் மேல்சபை வளாகத்தில், காபி, டீயை தவிர வேறு எதுவும் கிடைப்பது இல்லை,” என, பா.ஜ., உறுப்பினர் அருண் வருத்தம் தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், அவர் பேசியதாவது:
மேல்சபை வளாகத்தில், நாங்கள் ஒன்றரை மணி நேரம் இருக்கிறோம். இங்கு காபி, டீயை தவிர வேறு எதுவும் கிடைப்பது இல்லை. ஆனால் சட்டசபை வளாகத்தில், பானிபூரி, ஆம்லெட் என, அனைத்தும் கிடைக்கின்றன. இங்கு எங்களுக்கு எந்த சலுகையும் இல்லை.
காலையில் சபைக்கு வந்தால், இரவு வரை இங்கேயே இருக்கிறோம். நாங்கள் எங்கும் செல்வது இல்லை. ஆனால் எங்களுக்கு எந்த வசதிகளும் இல்லையா?
இவ்வாறு அவர் பேசினார்.
அருணை சமாதானம் செய்த மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, அடுத்த முறை இந்த பிரச்னையை சரி செய்வதாக உறுதி அளித்தார்.

