
! அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் நெருங்கிய நண்பர் என, பிரதமர் மோடி கூறுகிறார். அந்த நெருங்கிய நண்பர் தான், நம் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். விவசாயிகளை காக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என அறைகூவல் விடுக்கும் மோடி, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மல்லிகார்ஜுன கார்கே காங்., தேசிய தலைவர்
ரூ.8.70 லட்சம் கோடி!
இந்தியா- - ஆப்ரிக்கா வர்த்தகம், 2024 - 25ம் நிதியாண்டில் 8.70 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆப்ரிக்க கண்டத்தின் முதல் ஐந்து முதலீட்டாளர்களில் ஒருவராக இந்தியா உருவெடுத்துள்ளது. நம் நாட்டின் வெளியுறவு கொள்கையில், ஆப்ரிக்கா தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது.
கீர்த்தி வர்தன் சிங் மத்திய அமைச்சர், பா.ஜ.,
மோடி துாய்மையானவர்!
ஊழல் மிகுந்த குடும்பம் மற்றும் பயங்கரமான திருடர்கள் குடும்பம் என இருந்தால், அது சோனியா குடும்பமாகத் தான் இருக்கும். ஊழல் வழக்குகளில் சிக்கிய சோனியா, ராகுல் போன்றோர் ஜாமினில் வெளியே உள்ளனர். புனித கங்கை நதியை போல பிரதமர் நரேந்திர மோடி மிகவும் துாய்மையானவர்.
கவுரவ் பாட்டியா செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

