ADDED : மார் 24, 2026 12:46 AM

மேற்காசிய விவகாரம் குறித்து, லோக்சபாவில் பிரதமர் மோடி அளித்த விளக்கத்தில் புதிய தகவல்கள் எதுவுமில்லை. அரைத்த மாவையே அரைத்தார். இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பும் கருத்து தெரிவிக்க அனுமதிக்க வேண்டும். இதனால், பார்லி.,யில் விவாதம் நடக்க வேண்டும். ஆனால் விவாதம் நடத்த அரசு தயாராக இல்லை.
- பிரியங்கா, லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்
ஒவ்வொருவரின் பொறுப்பு!
தண்ணீர் என்பது வெறும் உரிமை மட்டுமல்ல, அது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு. நாம் தற்போது நீரை சேமிக்க தவறினால் எதிர்கால சந்ததியினர் கடும் அவதி அடைவர். நாட்டின் எதிர் கால தண்ணீர் பாதுகாப்பை உறுதிசெய்ய, நீரை சேமிக்க மக்கள் முன்வர வேண்டும். தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நாடு தயாராக உள்ளது.
- சி.ஆர்.பாட்டீல், மத்திய அமைச்சர், பா.ஜ.,
ஓவைசி பணம் வாங்கினார்!
ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசிக்கு பா.ஜ., பணம் கொடுக்கிறது. 2021ல் ந டந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலிலும், அக்கட்சியிடம் இருந்து அவர் பணம் பெற்றார். எவ்வளவு பணம் வாங்கினார் என்பதை சொல்ல மாட்டேன். ஆனால் ப ணம் வாங்கினார் என்பது தெரியும். ஏனெனில் , அப்போது நான் பா.ஜ.,வில் இருந்தேன்.
- ஜெய் பிரகாஷ், மஜும்தார் மூத்த தலைவர், திரிணமுல் காங்.,
