ADDED : பிப் 25, 2025 12:07 AM

உ.பி.,யில், 2013ல் முதல்வராக இருந்த சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், கும்பமேளா நிகழ்வுகளை நேரில் பார்வையிடவில்லை; அதற்கான ஏற்பாடுகளை கூட கவனிக்கவில்லை. அந்த பொறுப்புக்கு, சனாதனி அல்லாத ஒருவரை அகிலேஷ் யாதவ் நியமித்தார்.
யோகி ஆதித்யநாத்
உ.பி., முதல்வர்,
பா.ஜ.,
எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லை!
ஆந்திர சட்டசபையில், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசுக்கு வெறும், 11 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே இருப்பதால், 2029 வரை, அக்கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமும் இல்லை.
பவன் கல்யாண்
ஆந்திர துணை முதல்வர்,
ஜனசேனா
நடவடிக்கை இல்லை!
பீஹாரில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., கூட்டணி ஆட்சி நடந்த போது, ஹிந்து - முஸ்லிம் மோதல்களை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முஸ்லிம் ஓட்டுகளை பெறுவது மட்டுமே அக்கூட்டணியின் குறிக்கோளாக இருந்தது. நாங்கள் ஆட்சி அமைத்த பின், நிலைமை சீரானது.
நிதிஷ் குமார்
பீஹார் முதல்வர்,
ஐக்கிய ஜனதா தளம்