ஓடுதளத்தில் சாப்பாடு போட்ட 'இண்டிகோ'வுக்கு நோட்டீஸ்
ஓடுதளத்தில் சாப்பாடு போட்ட 'இண்டிகோ'வுக்கு நோட்டீஸ்
UPDATED : ஜன 16, 2024 08:58 PM
ADDED : ஜன 16, 2024 08:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி; கோவாவில் இருந்து புதுடில்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நீண்ட நேர தாமதத்துக்கு பின் புறப்பட்டது. ஆனால், பனிமூட்டம் காரணமாக புதுடில்லி செல்ல முடியாமல், மும்பையில் தரையிறங்கியது.
கீழே இறங்கிய பயணியர், விமான நிலையத்தின் உள்ளே செல்லும் வரை பசி தாங்க முடியாமல், விமான ஓடுதளத்திலேயே தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். இந்த, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
பாதுகாக்கப்பட்ட பகுதியான விமான ஓடுதளத்தில் பயணியர் உணவு சாப்பிட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு இண்டிகோ நிறுவனத்துக்கும், மும்பை விமான நிலையத்துக்கும் விமான பாதுகாப்பு பணியகம் நோட்டீஸ் அனுப்பியது.