அரசு பங்களாவை காலி செய்ய மஹூவா மொய்த்ராவுக்கு நோட்டீஸ்
அரசு பங்களாவை காலி செய்ய மஹூவா மொய்த்ராவுக்கு நோட்டீஸ்
ADDED : ஜன 08, 2024 08:38 PM

புதுடில்லி: கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற வழக்கில் எம்.பி., பதவி பறிக்கப்பட்ட திரிணமுல் காங்., எம்.பி,., அரசு பங்களாவை காலி செய்ய கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்தவர், மஹுவா மொய்த்ரா. கிருஷ்ணா நகர் லோக்சபா தொகுதியின் எம்.பி.,யாக இருந்தார்.இவர், பார்லிமென்டில் அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி கேள்வி எழுப்ப, மற்றொரு தொழிலதிபரான தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இது குறித்து, பார்லி., ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து, மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்தது. அந்த அறிக்கையை ஏற்று, கடந்த 8ம் தேதி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், புதுடில்லியில் அரசு பங்களாவை காலிசெய்ய கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் நோட்டீஸ் அனுப்பி 30 நாட்களுக்குள் காலி காலி செய்ய லோக்சபா செயலகம் அனுப்பியது..
இதனை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியன் பிரசாத், மஹூவா மொய்த்ராவுக்கு ஒதுக்கிய அரசு பங்களா அனுமதி ரத்து செய்ய வீட்டுவசதி, ஊரக விவகாரங்களுக்கான மத்திய அமைச்சககத்திற்கு உத்தரவிட்டு, காலி செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.