நடிகர் திலீப்புக்கு முன் வரிசை தரிசனம் நான்கு பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்
நடிகர் திலீப்புக்கு முன் வரிசை தரிசனம் நான்கு பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்
ADDED : டிச 09, 2024 12:31 AM

சபரிமலை: சபரிமலையில் பக்தர்களின் வரிசையை தடுத்து நடிகர் திலீப்புக்கு முன் வரிசையில் தரிசன வசதி ஏற்படுத்திக் கொடுத்தது தொடர்பாக தேவசம் போர்டு அதிகாரிகள் 2 பேர் உட்பட 4 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.
கடந்த 5ம் தேதி சபரிமலை தரிசனத்திற்கு வந்த நடிகர் திலீப், அவருடன் வந்தவர்கள் இரவு ஹரிவராசனம் பாடும் போதும் அதிகாலை நிர்மால்ய தரிசனத்தின் போதும் முன் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இந்த நேரத்தில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதை கேரள உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்தது. திலீப் வி.ஐ.பி. அந்தஸ்தில் உள்ளாரா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சபரிமலை செயல் அலுவலர் விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கோயில் நிர்வாக அதிகாரி, துணை செயல் அலுவலர், 2 தேவசம் காவலர்களிடம் விளக்கம் கேட்டு நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. சபரிமலை செயல் அலுவலர் கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.