அமைப்புசாரா தொழிலாளர்களின் குறைந்த பட்ச சம்பளம் அறிவிப்பு
அமைப்புசாரா தொழிலாளர்களின் குறைந்த பட்ச சம்பளம் அறிவிப்பு
ADDED : செப் 25, 2024 08:28 PM
புதுடில்லி:அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியங்களை முதல்வர் ஆதிஷி சிங் அறிவித்தார்.
இதுகுறித்து, முதல்வர் ஆதிஷி சிங் நேற்று வெளியிட்ட உத்தரவு:
அமைப்புசாரா தொழிலாளர்களில் திறன் இல்லாதோருக்கு மாதச் சம்பளம் 18,066 ரூபாயும், குறைவான திறன் உடையோருக்கு 19,929 ரூபாயும் திறன் பயிற்சி பெற்றோருக்கு 21,917 ரூபாயும் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டில்லி முதல்வராக பொறுப்பேற்ற பின், முதன் முறையாக நிருபர்களிடம் நேற்று, ஆதிஷி கூறியதாவது:
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுதான் நாட்டிலேயே அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்தியது. ஏழைகளுக்கு எதிரான பா.ஜ. ஆளும் மாநிலங்களில் குறைந்தபட்ச ஊதியம் டில்லியில் வழங்கப்படுவதை விட பாதிதான் கொடுக்கப்படுகிறது. கெஜ்ரிவால் தலைமையிலான டில்லி அரசு நீதிமன்றம் வாயிலாக குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்தியது மட்டுமல்லாமல் மத்தியில் ஆளும் பா.ஜ., அரசின் முட்டுக்கட்டைகளையும் உடைத்து, ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை சம்பளம் திருத்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

