இப்போது நான் பேசுவதை வைத்துக்கூட அரசியல் பண்ணலாம்: சொல்கிறார் கமல்
இப்போது நான் பேசுவதை வைத்துக்கூட அரசியல் பண்ணலாம்: சொல்கிறார் கமல்
ADDED : அக் 07, 2025 12:27 PM

சென்னை: ''இப்ப நான் பேசுறத கூட வச்சி அரசியல் பண்ணலாம். பண்ணாமல் இருப்பது நம்ம இரண்டு பேர் கடமை,'' என, 'கரூர் சம்பவத்தில் அரசியல் செய்யப்படுகிறதா' என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, கமல் பதில் அளித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் கமல் கூறியதாவது: ராமதாசை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக வந்தேன். ஆனால் விசாரிப்பதற்கு முன்னதாகவே நல்ல செய்தி வந்தது. இன்னைக்கு மாலை ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட இருக்கிறார். அவரிடம் பேசிக் கொண்டு இருந்தேன். அவர் நலமாக இருக்கிறார். வைகோ ஓய்வு எடுத்து கொண்டு இருக்கிறார். அவருக்கும் உடல்நலம் சரியாகிவிட்டது என்று சொன்னார்கள். வைகோ, ராமதாஸ் இருவரும் நலமாக இருக்கின்றனர்.
கேள்வியும், பதிலும்!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, '' கரூர் விஷயத்தினை தினமும் பேசி கொண்டு இருக்க கூடாது. இந்த விஷயம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இந்த சம்பவம் சோகம் தான். அது பற்றி பேசிக்கொண்டே இருப்பதால் அந்த சோகம் போய்விடாது. இனி அது மாதிரி நிகழாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பது நமது கடமை'' என கமல் பதில் அளித்தார்.
நிருபர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் அரசியல் செய்யப்படுகிறதா?
கமல் பதில்: எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம். இப்ப நான் பேசுறத கூட வச்சி அரசியல் பண்ணலாம். பண்ணாமல் இருப்பது நம்ம இரண்டு பேர் கடமை.