என்.ஆர்.ஐ., ஒதுக்கீடு என்பது பித்தலாட்டம்: பஞ்சாப் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்!
என்.ஆர்.ஐ., ஒதுக்கீடு என்பது பித்தலாட்டம்: பஞ்சாப் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்!
ADDED : செப் 24, 2024 07:04 PM

புதுடில்லி: மருத்துவக் கல்லுாரிகளில் என்.ஆர்.ஐ.,களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பஞ்சாப் அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.
பஞ்சாப் மாநில மருத்துவக்கல்லுாரிகளில், மருத்துவ படிப்பில், என்.ஆர்,ஐ.,க்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மாநில அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக இந்த கோரிக்கையை மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் முன் வைத்தது.கோரிக்கை மனுவில், 'என்.ஆர்.ஐ.,க்களின் துாரத்து உறவினர்களுக்கு, மருத்துவக் கல்லுாரிகளில் 15 சதவீதம் ஓதுக்கீடு வேண்டும்' என குறிப்பிட்டிருந்தது.
சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி பரி்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழக்கை விசாரித்தது.
அப்போது நீதிபதிகள், 'என்.ஆர்.ஐ.,களுக்கு இட ஒதுக்கீடு செய்வதை உடனே நிறுத்த வேண்டும். இது சுத்தமான பித்தலாட்டம். நமது கல்வித்துறை அமைப்பிற்கு இந்த ஒதுக்கீடு என்ன செய்யப்போகிறது? இந்த பித்தலாட்டத்தை உடனடியாக நிறுத்தி முடிவு கட்ட வேண்டும் என்று கூறி மாநில அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.

