உள்ளடக்கத்திற்கு செல்ல

நம்பிக்கை, பெருமையை ஏற்படுத்தும் என்எஸ்ஜி: பிரதமர் மோடி
நம்பிக்கை, பெருமையை ஏற்படுத்தும் என்எஸ்ஜி: பிரதமர் மோடி
UPDATED : அக் 16, 2026 06:57 PM
ADDED : அக் 16, 2026 06:56 PM

அ நிறம் | அளவு
- நமது டில்லி நிருபர் -
தேசிய பாதுகாப்பு படையின்(என்எஸ்ஜி) 42வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, அப்படைக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுக்கு நல்வாழ்த்துகள். அவர்களின் துணிவு, துல்லியம், கடைமை உணர்வில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடையாளமாக திகழ்கின்றனர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான கண்காணிப்பு, நமது மக்களையும், தேசிய சொத்துகளை பாதுகாப்பதில் அவர்களின் தயார் நிலையும் அளவற்ற நம்பிக்கையையும் பெருமிதத்தையும் அளிக்கின்றன. இவ்வாறு அந்தப்பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
