மும்பை தாக்குதலில் ஹீரோவான என்.எஸ்.ஜி., கமாண்டோ கஞ்சா வழக்கில் கைது
மும்பை தாக்குதலில் ஹீரோவான என்.எஸ்.ஜி., கமாண்டோ கஞ்சா வழக்கில் கைது
ADDED : அக் 04, 2025 02:52 AM

ஜெய்ப்பூர்:மும்பை பயங்கரவா த தாக்குதலின் போது, நாட்டுக்காக துப்பாக்கி ஏந்தி சண்டையிட்ட கமாண்டோ வீரர், 200 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரர் ஒருவர், போதை பொருள் கடத்தல் வலையமைப்பில் ஈடுபட்டுள்ளதாக ராஜஸ்தான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அவரை பிடித்து கொடுத்தால், 25,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு படையினரும், போதை பொருள் தடுப்பு போலீசாரும் இணைந்து, 'ஆப்பரேஷன் காஞ்ஜனே' என்ற பெயரில் கடந்த இரண்டு மாதங்களாக அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், ராஜஸ்தானின் சுரு பகுதியில் பஜ்ரங் சிங் என்ற தேசிய பாதுகாப்பு படை முன்னாள் வீரரை, 20 0 கிலோ கஞ்சாவுடன் போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இது குறித்து போலீஸ் ஐ.ஜி., விகாஸ் குமார் கூறியதாவது:
பஜ்ரங் சிங், 10ம் வகுப்பு வரை படித்துள்ளா ர். பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றினார். பஞ்சாப், ராஜஸ்தான், ஒடிஷா, மேற்கு வங்க எல்லைகளில் பணியாற்றி உள்ளார்.
அவரது அர்ப்பணிப்பு உணர்வை அறிந்த அதிகாரிகள் அவரை என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்பு படைக்கு தேர்வு செய்தனர். அதில், கமாண்டோவாக பஜ்ரங் ஏழு ஆண்டுகள் பணியாற்றினார்.
கடந்த 2008ல் மஹாராஷ்டிராவின் மும்பையை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கியபோது, மிக சிறப்பாக செயல்பட்டு, பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டார். மக்கள், அவரை ஹீரோவாக போற்றினர்.
க டந்த 2021ல் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின் அரசியலில் ஈடுபட்டார். அதில் ஜொலிக்க முடியாததால், போதை பொருள் கடத்தலில் பஜ்ரங் சிங் இறங்கினார். எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றிய அவரது அனுபவம் காரணமாக, தெலுங்கானா மற்றும் ஒடிஷாவில் இ ருந்து ராஜஸ்தானுக்கு கஞ்சா கடத்தலில் ஈடுபட்டார்.
ஒரே ஆண்டில் நாட்டில் உள்ள கஞ்சா கடத்தல் வலையமைப்பில் முக்கிய நபராக மாறிய நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.