தேசிய அனல் மின் நிலையத்தில் 30 பேருக்கு டிரெய்னி வாய்ப்பு: டிப்ளமோ படித்தவர்களுக்கு சான்ஸ்!
தேசிய அனல் மின் நிலையத்தில் 30 பேருக்கு டிரெய்னி வாய்ப்பு: டிப்ளமோ படித்தவர்களுக்கு சான்ஸ்!
ADDED : செப் 29, 2024 07:01 AM

புதுடில்லி: தேசிய அனல் மின் நிலையத்தில் 30 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 10.
மத்திய அரசுக்கு சொந்தமான NTPC-SAIL பவர் கம்பெனி லிமிடெட்டில் (NSPCL) டிப்ளமோ டிரெய்னி மற்றும் லேப் அசிஸ்டெண்ட் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பணியிடங்களுக்கு மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய துறைகளில் டிப்ளமோ படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மெக்கானிக்கல் - 6,
எலக்ட்ரிக்கல்- 12
டிப்ளமோ டிரெய்னி (C&I) - 6,
ஆய்வக உதவியாளர்- 6,
கல்வி தகுதிகள் என்ன?
60% மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பாடப்பிரிவில் டிப்ளமோ படித்து முடித்திருக்க வேண்டும்.
ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு 60% மதிப்பெண்களுடன் வேதியியலில் பாடப்பிரிவில் பி.எஸ்.சி., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், EWS பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்வது எப்படி?
ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் ரூ.300. SC, ST, PwBD பிரிவினர், பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
http://www.nspcl.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.