என்.டி.பி.சி., அறிவித்த 50 காலியிடங்கள்: பட்டதாரிகளுக்கு சூப்பர் சான்ஸ்!
என்.டி.பி.சி., அறிவித்த 50 காலியிடங்கள்: பட்டதாரிகளுக்கு சூப்பர் சான்ஸ்!
ADDED : அக் 18, 2024 08:11 AM

புதுடில்லி: நாட்டின் முன்னணி மின்சக்தி நிறுவனமான என்.டி.பி.சி.,யில் 50 காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 28.
பொதுத்துறை நிறுவனமான, தேசிய அனல்மின் நிறுவனம் எனப்படும் என்.டி.பி.சி.,யில் ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ்- 50.
கல்வித்தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் அக்ரிகல்ச்சர் சயின்ஸ் பாடப் பிரிவில் பிஎஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப் படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://careers.ntpc.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.