தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/என்.டி.பி.சி., அறிவித்த 250 காலியிடங்கள்: சூப்பர் சான்ஸ், மிஸ் பண்ணிடாதீங்க!

என்.டி.பி.சி., அறிவித்த 250 காலியிடங்கள்: சூப்பர் சான்ஸ், மிஸ் பண்ணிடாதீங்க!

என்.டி.பி.சி., அறிவித்த 250 காலியிடங்கள்: சூப்பர் சான்ஸ், மிஸ் பண்ணிடாதீங்க!


ADDED : செப் 12, 2024 06:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2024 06:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: நாட்டின் முன்னணி மின்சக்தி நிறுவனமான என்.டி.பி.சி.,யில் எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் உள்ளிட்ட பிரிவுகளில் 250 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 28.

பொதுத்துறை நிறுவனமான, தேசிய அனல்மின் நிறுவனம் எனப்படும் என்.டி.பி.சி.,யில் எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துணை துணை மேலாளர் (எலக்ட்ரிக்கல் எரெக்ஷன்) - 45

துணை மேலாளர் (மெக்கானிக்கல் எரெக்ஷன்)- 95

C&I எரெக்ஷன்- 35

சிவில் கன்ஸ்ட்ரக்ஷன்- 75

கல்வித்தகுதி என்ன?

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக் துறையில் பி. இ., பட்டம் பெற்றிருக்க வேண்டும். பத்தாண்டு முன் அனுபவம் தேவை.

வயது வரம்பு

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD பிரிவினருக்கும் 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் ரூ. 300. எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

https://careers.ntpc.co.in/recruitment/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்வது எப்படி?

தேர்வு முறை எழுத்து/கணினி அடிப்படையிலான தேர்வு, தனிப்பட்ட நேர்காணல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.

விண்ணப்பிக்க கடைசி தேதி

வரும் செப்டம்பர் 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 28.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us