ADDED : அக் 21, 2024 12:31 AM

பெலகாவி : மனைவி, அவரது நண்பர்களால் கொலை செய்யப்பட்ட, தொழில் அதிபரின் ஆபாச வீடியோக்கள், பறிமுதல் செய்யப்பட்டது.
பெலகாவியின் மஹாந்தேஷ் நகரில் வசித்தவர் சந்தோஷ் பத்மண்ணவர், 45; தொழில் அதிபர். கடந்த 9ம் தேதி திடீரென இறந்தார். மாரடைப்பால் இறந்ததாக கூறி, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. சந்தோஷ் சாவில் சந்தேகம் இருப்பதாக கடந்த 14ம் தேதி அவரது மகள், மாலமாருதி போலீசில் புகார் செய்தார். விசாரணையில் சந்தோஷை, அவரது மனைவி உமா, அவரது முகநுால் நண்பர்கள் இருவர் சேர்ந்து, தலையணையால் முகத்தை அழுத்தி கொன்றது தெரிந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் உமா போலீசில் அளித்த வாக்குமூலத்தில், 'எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. இதனால் என்னை கொடுமைப்படுத்தினார். முகநுால் நண்பர்களுடன் சேர்ந்து கொன்றேன்' என்று கூறி இருந்தார்.
இதையடுத்து, சந்தோஷ் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது, 13 ஹார்ட் டிஸ்க்குகள், மூன்று பென்டிரைவ்கள் கிடைத்தன.
அதில் என்ன உள்ளது என்று ஆய்வு செய்த போது, சந்தோஷ் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்தது.
இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். புகைப்படங்கள், வீடியோவை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.