அக்., மாத ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.87 லட்சம் கோடி: தமிழகத்தில் எவ்வளவு தெரியுமா?
அக்., மாத ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.87 லட்சம் கோடி: தமிழகத்தில் எவ்வளவு தெரியுமா?
ADDED : நவ 01, 2024 05:22 PM

புதுடில்லி: அக்., மாதம் ஜி.எஸ்.டி., வருமானம் 9 சதவீதம் அதிகரித்து ரூ.1.87 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளது.
ஜி.எஸ்.டி., மூலம் கிடைத்த ரூ.1.87 லட்சம் கோடியில்
சி.ஜி.எஸ்.டி., ரூ.33,821 கோடி
எஸ்.ஜி.எஸ்.டி.,- ரூ.41,864 கோடி
ஐ.ஜி.எஸ்.டி.,- ரூ. 99,111 கோடி
செஸ் - ரூ.12,550 கோடி அடங்கும்.
2022 அக்., மாதம் ரூ.1.72 லட்சம் கோடி ஜி.எஸ்.டி., வசூல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்., மாதம் உள்நாட்டு பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் ஜி.எஸ்.டி., 10.6 சதவீதம் அதிகரித்து ரூ.1.42 லட்சம் கோடியும் இறக்குமதி மூலம் கிடைக்கும் வருமானம் 4 சதவீதம் அதிகரித்து ரூ.45,096 கோடியும் வசூல் ஆகி உள்ளது.
2024ம் ஆண்டு ஜன., முதல் அக்., வரை 12.74 லட்சம் கோடி ஜி.எஸ்.டி., வசூல் ஆகி உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.11.64 லட்சம் கோடி மட்டுமே வசூல் ஆகி இருந்தது.
கடந்த ஏப்., மாதம் புதிய சாதனையாக ஜி.எஸ்.டி., மூலம் ரூ.2.10 லட்சம் கோடி வசூலாகி இருந்தது.