ஒடிசாவிலும் பிரசாத நெய் பிரச்னை; தரம் பரிசோதிக்க அரசு முடிவு
ஒடிசாவிலும் பிரசாத நெய் பிரச்னை; தரம் பரிசோதிக்க அரசு முடிவு
ADDED : செப் 25, 2024 10:36 AM

புவனேஸ்வர்; புரி ஜெகந்நாதர் கோவிலில் பயன்படுத்தப்படும் நெய்யின் தரத்தை பரிசோதித்த ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.
திருப்பதி கோவிலின் லட்டு பிரசாதத்தால் எழுந்த பிரச்னை இப்போது வரை ஓயவில்லை. அம்மாநில அரசியலிலும், பக்தர்கள் மனதிலும் புயல் பிளஸ் புகைச்சலை கிளப்பியுள்ள இந்த விவகாரம் தற்போது ஒடிசா வரை சென்றுள்ளது. அங்குள்ள புரி ஜெகந்நாதர் கோயிலில் பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் பற்றி பரிசோதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து புரி மாவட்ட கலெக்டர் சித்தார்த் சங்கர் கூறி உள்ளதாவது; கோவிலுக்கு ஒடிசா மாநில பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தில் இருந்து தான் நெய் வினியோகிக்கப்படுகிறது.
இது வரை எந்த புகாரும் குறித்து எங்களுக்கு புகார் வரவில்லை. இருப்பினும் பிரசாதத்துக்கு பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறித்து பரிசோதிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.