ADDED : நவ 18, 2025 12:26 AM

திருவனந்தபுரம்: கேரளாவில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. கண்ணுார் மாவட்டத்தின் பையனுாரை சேர்ந்த அனீஸ் ஜார்ஜ், 44, என்பவர் ஓட்டுச்சாவடி நிலை அலுவலராக பணியாற்றி வந்தார்.
எஸ்.ஐ.ஆர்., பணியால் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் அவர், நேற்று முன்தினம், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் அனீஸ் ஜார்ஜின் தற்கொலைக்கு நீதி கேட்டு, கேரளாவில் எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்டுள்ள ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் அனைவரும், நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாநிலம் முழுதும் எஸ்.ஐ.ஆர்., பணி பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, எஸ்.ஐ.ஆர்., பணியின் போது ஆளும் மார்க்.கம்யூ., நிர்வாகிகள், அனீஸ் ஜார்ஜுக்கு மிரட்டல் விடுத்தனரா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்., வலியுறுத்தி உள்ளது.

