வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த அதிகாரி சஸ்பெண்ட்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த அதிகாரி சஸ்பெண்ட்
ADDED : டிச 03, 2024 11:34 PM

பாலக்காடு; கேரளாவில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த உதவி மோட்டார் வாகன ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம் செறுவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 43. இவர், பாலக்காடு மாவட்டம் ஒற்றைப்பாலம் துணை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், உதவி மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த அக்., 29ம் தேதி, பாலக்காடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், ஒற்றைப்பாலத்தில் மணிகண்டன் வசித்த வாடகை வீட்டில், சோதனையிட்டபோது கணக்கில் வராத, 1.9 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சம்பாதித்ததாக கூறி, மணிகண்டன் மீது கோழிக்கோடு லஞ்ச ஒழிப்பு சிறப்பு பிரிவில், வழக்கு பதிவு செய்து முதல் கட்ட விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், உதவி மோட்டார் வாகன ஆய்வாளர் மணிகண்டனை, சஸ்பெண்ட் செய்து கேரள மாநில போக்குவரத்து ஆணையர் நாகராஜு சக்கிலம் உத்தரவிட்டுள்ளார்.
இவர், ஆடு 2, ஜானகீஜானை, அஞ்சாம்பாதிரா உட்பட மலையாள திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடப்பட்டது.