அதிகாரிகள் ‛அடி' வாங்கிய சம்பவம்: மேற்குவங்க அரசிடம் அறிக்கை கேட்கும் உள்துறை அமைச்சகம்
அதிகாரிகள் ‛அடி' வாங்கிய சம்பவம்: மேற்குவங்க அரசிடம் அறிக்கை கேட்கும் உள்துறை அமைச்சகம்
UPDATED : ஜன 09, 2024 09:07 PM
ADDED : ஜன 09, 2024 09:04 PM

புதுடில்லி: மேற்குவங்க மாநிலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை தர கோரி மேற்குவங்க அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமுல்காங்., கட்சி அமைச்சர் ஜோதிப்ரியோ மாலிக், 65. உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த போது, ரேஷன் வினியோகத்தில் நடந்த ரூ. பல கோடி ஊழல் தொடர்பாக 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் தொடர்புடைய திரிணமுல் காங்., பிரமுகர் ஷேக் ஷாஜஹானின் வீடு உள்ள வடக்கு 24 பர்கானா மாவட்டத்தின் சந்தேஷ்காளி என்ற கிராமத்திற்கு கடந்த 5-ம் தேதி அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்த காரில் சென்ற போது கட்சி தொண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டனர்.
வாகனங்கள் சேதமடைந்தன. அதிகாரி ஒருவரின் மண்டை உடைந்தது.இந்த சம்பவம் தொடர்பாக மேற்குவங்க போலீசார் எடுத்த நடவடிக்கைகள் ,பதியப்பட்டவழக்கு விவரங்கள், கைது செய்யப்பட்டவர்கள் குறித்து விரிவான அறிக்கையை தர கோரி மத்திய உள்துறை அமைச்சகம் ,மேற்குவங்க அரசை வலியுறுத்தியுள்ளது.