பொது கழிப்பறைகள் கட்டுவதற்கு இடம் தேட அதிகாரி உத்தரவு
பொது கழிப்பறைகள் கட்டுவதற்கு இடம் தேட அதிகாரி உத்தரவு
ADDED : டிச 21, 2024 11:03 PM
பெங்களூரு: மஹாதேவபுரா மண்டலத்தில் பொதுக்கழிப்பறைகள் கட்ட வேண்டும். இதற்கான இடங்களை அடையாளம் காணும்படி, அதிகாரிகளுக்கு பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் பிறப்பித்த உத்தரவு:
மஹாதேவபுரா மண்டலத்தில், பொதுக் கழிப்பறைகள் இல்லை என, மக்கள் கூறியுள்ளனர். மாநகராட்சி எல்லைக்குள், 200 ஹைடெக் பொதுக் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இடங்களை அடையாளம் காண வேண்டும். அதன்பின் அதிகாரிகள் டெண்டர் அழைத்து, விரைவில் பணிகளை துவக்க வேண்டும்.
கே.ஆர்.புரத்தின், ஆர்.என்.எஸ்., காலனி, புவனேஸ்வரி லே - அவுட், பனசங்கரி லே - அவுட் சுற்றுப்பகுதிகளில் சாக்கடை நீர் சாலைகளில் பாய்கிறது. இதனால் கொசுக்கள் தொல்லை அதிகரிப்பதாக, மக்கள் புகார் கூறியுள்ளனர். அங்கு கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.