மீண்டும் கார் திருடிய வயதான'புத்திசாலி திருடன்' டில்லியில் கைது
மீண்டும் கார் திருடிய வயதான'புத்திசாலி திருடன்' டில்லியில் கைது
ADDED : பிப் 20, 2024 08:40 PM

புதுடில்லி: ஆயிரம் கார்களை திருடிய புத்திசாலி திருடனை டில்லி போலீசார் கைது செய்தனர்.
தானிராம் மிட்டல்! இந்த பெயர் போலீஸ் பதிவுகளில் புத்திசாலி திருடன் என்றும் இந்தியாவின் சார்லஸ் சோப்ராஜ் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் சட்டபடிப்பு படித்துள்ளார்.கையெழுத்து நிபுணர், வரைபடவியல் நிபுணர் என ஏராளமான தகுதிகள் இருந்த போதிலும் திருட்டு வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார்.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக டில்லி, அரியானா, ராஜஸ்தான் உள்ளிட் வட மாநிலங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களை திருடி உள்ளார். மற்ற திருடர்களை போல் அல்லாமல் பகலிலேயே கார் திருடுவது இவரது ஸ்டைலாகும்.
இது மட்டுமல்லாது தனது சட்டபடிப்பு அறிவை பயன்படுத்தி சில குறிப்பிட்ட ஆவணங்களை பயன்படுத்தி ஜாஜ்ஜார் நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதியை இரண்டுமாத விடுமுறையில் அனுப்பினார். அதுமட்டுமல்ல நீதிபதியின் நாற்காலியில் அமர்ந்து 2ஆயிரம் குற்றவாளிகளை விடுவித்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது சொந்த வழக்கையே விசாரித்து அதற்கும் தீர்ப்பளித்துள்ளார். என கூறப்படுகிறது. இவையெல்லாம் அதிகாரிகளின் கவனத்திற்கு வருவதற்கு முன்பாகவே மிட்டல் தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் டில்லி ஷாலிமார் பாக் பகுதியில் திருடிய மாருதி எஸ்டீம் காரை ஸ்கிராப் டீலருக்கு விற்ற போது பாஸ்சிம் விஹார் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் பாதுகாப்பு அமைப்புகள் இல்லாத பழைய வாகனங்களை குறி வைத்து திருடுவதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் மிட்டல்

